
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்து அணியிடன் படுதோல்வியைச் சந்தித்து கோப்பையை இழந்தது. இதையடுத்து விராட் கோலியின் கேப்டன் திறன் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகிறது. அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.
உண்மையில் விராட் கோலியால் மூன்று வடிவ கிரிக்கெட்டையும் திறம்பட வழிநடத்த முடிகிறதா? என்பதே பல கிரிக்கெட் ஆர்வலர்கள் முன் வைக்கும் கேள்வி. தோனி போன்ற கேப்டனால் கூட டி20, ஒருநாள், டெஸ்ட் என்று மூன்று வடிவ கிரிக்கெட்டின் சுமையை சுமக்க முடியவில்லை எனும் போது, விராட் கோலி சட்டேன எடுக்கும் முடிவுகளுக்கு சில ஃபார்மட் கிரிக்கெட் ஒத்து வருகிறதா? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
குறிப்பாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், கோலியை விட மிகச் சிறப்பாக நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் செயல்பட்டார் என்பதே ஒட்டுமொத்த ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இதனால், அவரது கேப்டன்சி குறித்து தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது.