உங்கள் எடுத்த இன்னிங்ஸிற்கு வாழ்த்துகள் - ஆண்டர்சனுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் அறிமுக வீரர் கஸ் அட்கின்சன் 7 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 371 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக ஸாக் கிரௌலி 76 ரன்களையும், அறிமுக வீரர் கஸ் அட்கின்சன் 70 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 250 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 47 ஓவரில் 136 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Trending
இதன்மூலம் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியுடன் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இன்றைய ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக இவருக்கு இரு அணி வீரர்களும் பிரியா விடை கொடுத்தனர். கிட்டத்திட்ட 22 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ள ஆண்டர்சன் 188 டெஸ்ட்டில் விளையாடி 704 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் ஆண்டர்சனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் தனது எக்ஸ் பதிவின் மூலம் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவரது பதிவில், "ஜிம்மி ஆண்டர்சன், நீங்கள் கடந்த 22 ஆண்டுகளாக உங்களுடைய நம்பமுடியாத ஸ்பெல் மூலம் ரசிகர்களை கவர்ந்து விட்டீர்கள். நீங்கள் விடைபெறும்போது இதோ ஒரு சிறிய ஆசை. அந்த அதிரடி, வேகம், துல்லியம், ஸ்விங் மற்றும் உடற்தகுதியுடன் நீங்கள் பந்து வீசுவதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
Hey Jimmy!
— Sachin Tendulkar (@sachin_rt) July 12, 2024
You've bowled the fans over with that incredible 22-year spell. Here's a little wish as you bid goodbye.
It has been a joy to watch you bowl - with that action, speed, accuracy, swing and fitness. You've inspired generations with your game.
Wish you a wonderful life… pic.twitter.com/ETp2e6qIQ1
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
உங்கள் விளையாட்டின் மூலம் நீங்கள் ஒரு தலைமுறைகளை ஊக்கப்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் அற்புதமான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன். மேலும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிக முக்கிய தருணமான குடும்பத்துடன் நேரத்தை செலவிட தயாராவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் இந்த பதிவானது தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now