Advertisement

ரோஹித் சர்மாவுக்கு மேலும் ஒரு சீசன் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் - யுவராஜ் சிங்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு மேலும் ஒரு சீசன் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement
ரோஹித் சர்மாவுக்கு மேலும் ஒரு சீசன் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் - யுவராஜ் சிங்!
ரோஹித் சர்மாவுக்கு மேலும் ஒரு சீசன் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் - யுவராஜ் சிங்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 14, 2024 • 02:51 PM

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளனர். இதன் காரணமாக ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 14, 2024 • 02:51 PM

இந்நிலையில் இத்தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. ஆனால் ஏலத்திற்கு முன்னதாகவே ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் வாங்கியது. இதையடுத்து ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மாவை நீக்கியது பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது. 

Trending

இந்நிலையில் ரோஹித் சர்மாவுக்கு மேலும் ஒரு சீசன் கேப்டனாக மும்பை நிர்வாகம் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "மும்பை இந்தின்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். ஆனால் நடப்பு சீசனில் அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது பெரிய முடிவு. அந்த இடத்தில் நானாக இருந்திருந்தாலும் பாண்டியா போன்ற ஒருவரைத்தான் கொண்டு வருவேன். 

ஆனால் அதற்கு முன் ரோஹித் சர்மாவுக்கு மேலும் ஒரு சீசன் வாய்ப்பு கொடுத்து ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக நியமித்து மொத்த அணியும் எப்படி வேலை செய்கிறது என்பதை பார்ப்பேன். வருங்காலத்தை பார்க்கும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் கண்ணோட்டத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்தியாவின் கேப்டனாக ரோஹித் சர்மா இப்போதும் இருக்கும் நிலையில், அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது தவறானது.

ஹர்திக் பாண்டியா நல்ல திறமையான வீரர் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் குஜராத்தின் கேப்டனாக இருப்பதை விட மும்பையின் கேப்டனாக இருப்பது அதிகப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஏனெனில் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் என்பது மிகபெரிய அணி" என்று தெரிவித்துள்ளார். யுவராஜ் சிங்கின் இந்த கருத்தானது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement