
தற்போது உலகக் கோப்பைக்கு தயாராக இருக்கும் இந்திய அணி மிகச் சிறப்பான அணியாக இருக்கிறது. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரு துறைகளிலும் இந்திய அணி அருமையாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மிக முக்கியமாக பேட்டிங் என எடுத்துக் கொண்டால் பேட்டிங் யூனிட்டில் வருகின்ற அத்தனை பேரும் ரன்கள் எடுத்திருக்கிறார்கள். அதுவும் மிக முக்கியமான கட்டத்தில் ரன்கள் எடுத்து நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள்.
இதே போல் பந்துவீச்சு என்று எடுத்துக் கொண்டால் காயத்திலிருந்து திரும்ப வந்த பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவருமே சிறந்த உடல் தகுதியோடு சேர்த்து திறமையையும் பழையபடி வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மேற்படி சமி, சிராஜ், குல்தீப் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் என எல்லோருமே பந்துவீச்சில் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை மிகச் சிறப்பாக பயன்படுத்தி உலகத்தரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்திய அணிகள் டிக் செய்யப்படாத ஒரே பெட்டி இடது கை வேகப்பந்துவீச்சாளர் மட்டும்தான். இதன் காரணமாக இந்திய அணி தற்போது நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் மிகவும் பலம் வாய்ந்த ஒரு அணியாக பலராலும் கணிக்கப்படுகிறது. உலகக் கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ள அணிகளில் முதன்மை அணியாக தற்பொழுது இருக்கிறது.