
இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங். இவர் இந்திய அணிக்காக கடந்த 2000ஆம் ஆண்டு அறிமுகமாகி 2017ஆம் ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இந்த இடைபட்ட காலத்தில் இந்திய அணிக்காக 40 டெஸ்ட், 303 ஒருநாள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 15 சதம், 71 அரைசதங்கள் என 14ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார். அதேசமயம் பந்துவீச்சை பொறுத்தவரையில் 148 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேற்கொண்டு இந்திய அணி கடந்த 2007ஆம் அண்டு டி20 உலகக்கோப்பை தொடரை வெல்லவும், 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரையும் வெல்வதற்கும் மிக முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு இந்தாண்டு தொடங்கப்பட்ட லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரிலும் இந்தியா சாம்பியன்ஸ் அணியை வழிநடத்தியதுடன் சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.
இந்நிலையில் யுவராஜ் சிங் தனது ஆல் டைப் சிறந்த அணியை தேர்வு செய்துள்ளார். அவரது அணியில் இந்தியாவின் ஜாம்பவான் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருடன் தனக்கும் 12ஆம் வீரராக வாய்ப்பு கொடுத்துள்ளார். அதேசமயம் இந்திய அணிக்கு ஐசிசி டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை உள்ளிட்ட தொடர்களை வென்று கொடுத்த மகேந்திர சிங் தோனிக்கு அவரது அணியில் இடமளிக்கவில்லை.