
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலும், நடன இயக்குனர்-நடிகை தனஸ்ரீ வர்மாவும் விவாகரத்து வதந்திகளால் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளன. இந்த ஜோடி இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்வதை நிறுத்திய பிறகு, அவர்களது திருமணத்தில் பிரச்சனை இருப்பதாக வதந்திகள் பரவத் தொடங்கின. யுஸ்வேந்திர சாஹல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ வர்மாவின் அனைத்து புகைப்படங்களையும் நீக்கியபோது இந்த ஊகம் மேலும் வலுத்தது.
அவர்கள் இருவருக்கும் நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், அவர்கள் பல மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் பிரிவது உறுதியாகத் தெரிகிறது என்றும் கூறுகின்றன. இருப்பினும், இதற்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை.இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த சம்பவத்தின் உண்மை குறித்து சாஹலும் தனஸ்ரீயும் மௌனம் கலைப்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். இருப்பினும் அவர்கள் இருவரிடமிருந்தும் எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இந்நிகழ்வு குறித்து தனஸ்ரீ வர்மா தனது சமூக வலைதளபதிவில் மௌனம் கலைத்துள்ளார். இதுகுறித்து அவர், "கடந்த சில நாட்கள் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக இருந்தன. இதில் மிகவும் தொந்தரவாக இருப்பது என்னவென்றால், உண்மை சரிபார்ப்பு இல்லாமல், ஆதாரமற்ற தகவல் மற்றும் வெறுப்பைத் தூண்டும் ட்ரோல்களால் என் கதாபாத்திரம் முற்றுலும் தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது.
Dhanshree Verma's Instagram story. pic.twitter.com/0UUWSEEvVq
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 9, 2025