
ஆஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியானது வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கண்க்கில் டி20 தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி மதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஃப்கனிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் செதிகுல்லா அடல் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் 11 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ரஹ்மனுல்லா குர்பாஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஸுபைத் அக்பாரியும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் செதிகுல்லா அடலும் 18 ரன்களுடன் பெவிலியனுக்கு திரும்பினார்.
இதனால் ஆஃப்கானிஸ்தான அணி 33 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், ஜோடி சேர்ந்த தார்விஷ் ரசூலி - அஸ்மதுல்லா ஒமர்ஸாய் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய முகமது நபியும் 4 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதேசமயம் மறுபக்கம் பொறுப்புடன் விளையாடி வந்த ரசூலி சர்வாதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்தார்.