
ஆஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இதையடுத்து ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (டிசம்பர் 17) ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆஃப்கானிஸ்தான் அணி ஏற்கெனவே டி20 தொடரை வென்றுள்ள நிலையில் ஒருநாள் தொடரிலும் அதனை தொடரும் முனைப்பில் விளையாடவுள்ளது.
அதேசமயம் டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு இந்த தொடரில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது மழை காரணமாக தாமதமாகியுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னரே ஆஃப்கானிஸ்தான் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.