
ZIM vs SA, 2nd Test: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.
ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணி அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் வியான் முல்டர் முற்சதம் அடித்ததுடன் 367 ரன்களையும், டேவிட் பெடிங்ஹாம் 82 ரன்களையும், லுவான் ட்ரே பிரிட்டோரிஸ் 78 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 626 ரன்களைச் சேர்த்தது. ஜிம்பாப்வே தரப்பில் டனகா சிவாங்கா, குண்டாய் மாடிகிமு ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சீன் வில்லியம்ஸ் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 83 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க தரப்பில் பிரெனலன் சுப்ராயன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.