
ZIM vs SA 2nd Test, Dream11 Prediction: தென் ஆப்பிரிக்க அணியானது தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 06) புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். மறுபக்கம் ஜிம்பாப்வே அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் விளையாடும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ZIM vs SA: Match Details
- மோதும் அணிகள்: ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா
- இடம்: குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம், புலவாயோ
- நேரம்: ஜூலை 06, மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)