
ZIM vs SA, 2nd Test: ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியின் கேசவ் மஹாராஜ் விலகியதை அடுத்து வியான் முல்டர் அணியின் கேப்டனாக செயல்படுவார் எனறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஆபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 6ஆம் தேதி புலவாயோவில் நடைபெறவுள்ளது.
இதில் ஏற்கெனவே முதல் போட்டியை வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி இந்த போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வெல்ல முயற்சிக்கும், அதேசமயம் ஜிம்பாப்வே அணியானது முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி இன்னடைவை சந்தித்துள்ளது.