
அயர்லாந்து அணி எதிவரும் பிப்ரவரி மாதம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்படி ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்று மூன்று டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பிப்ரவரி 14ஆம் தேதி முதலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது பிப்ரவரி 22ஆம் தேதி முதலும் நடைபெற்வுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறும் நிலையில், ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஹராரேவில் நடைபெறவுள்ளது.
ஜிம்பாப்வே தொடருக்கான அயர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இதில் டெஸ்ட் அணியின் கேப்டனாக ஆண்ட்ரூ பால்பிர்னி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக பால் ஸ்டிர்லிங் தொடர்கிறார். மேற்கொண்டு இத்தொடருக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் அறிமுக வீரர் மோர்கன் டாப்பிங் சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு கவின் ஹோயும் டெஸ்டில் அறிமுகமாகவுள்ளார்.