தென் ஆப்பிரிக்க, நியூசிலாந்து அணிகளுடன் டெஸ்ட் & டி20 தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அடுத்தாக தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களுக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது.

ஜிம்பாப்வே அணி சமீபத்தில் அயர்லாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணியானது 63 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி வெற்றிபெற்றது.
அதன்பின் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஜிம்பாப்வே அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் ஜிம்பாப்வே அணியானது 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதில் ஒருநாள் தொடரின் முதல் மற்றும் மூன்றாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Trending
இந்நிலையில் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அடுத்தாக தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரை நடத்தவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் தலா இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள ஜிம்பாப்வே அணியானது, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகளுடன் இணைந்து முத்தரப்பு டி20 தொடரிலும் விளையாடவுள்ளது.
அந்தவகையில் ஜிம்பாப்வே அணி முதலாவதாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது ஜூன் 28ஆம் தேதி தொடங்கி ஜூலை 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்பின் ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நடைபெறவுள்ளது.
அதன்படி இந்த முத்தரப்பு தொடரானது ஜூலை 14ஆம் தேதி தொடங்கும் நிலையில், தொடரின் இருதிப்போட்டியானது ஜூலை 26ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஜிம்பாப்வே அணி நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயன இத்தொடர் ஜூலை 30ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா தொடர்
- முதல் டெஸ்ட், ஜூன் 28 - ஜூலை 2 - ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்
- 2ஆவது டெஸ்ட், ஜூலை 6-10 - ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்
முத்தரப்பு டி20 தொடர்
- முதல் டி20, ஜூலை 14 - ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
- 2ஆவது டி20, ஜூலை 16 - தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
- 3ஆவது டி20, ஜூலை 18 - ஜிம்பாப்வே vs நியூசிலாந்து, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
- 4ஆவது டி20, ஜூலை 20 - ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
- 5ஆவது டி20, ஜூலை 22 - நியூசிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
- 6ஆவது டி20, ஜூலை 24 - ஜிம்பாப்வே vs நியூசிலாந்து, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
- இறுதிப்போட்டி, ஜூலை 26 - ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
Also Read: Funding To Save Test Cricket
ஜிம்பாப்வே vs நியூசிலாந்து தொடர்
- முதல் டெஸ்ட், ஜூலை 30 - ஆகஸ்ட் 3 - ஜிம்பாப்வே vs நியூசிலாந்து, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்
- இரண்டாவது டெஸ்ட், ஆகஸ்ட் 7-11 - ஜிம்பாப்வே vs நியூசிலாந்து, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்
Win Big, Make Your Cricket Tales Now