ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணியில் ஏழு அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரின் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்திவுள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது,
Trending
இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கவுள்ளது. மேற்கொண்டு இந்த டெஸ்ட் தொடருக்கன ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான இந்த ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இந்த அணியில் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.
மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணியில் 7 அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆல்ரவுண்டர் இஸ்மத் ஆலம், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜாஹிர் ஷெஹ்சாத் மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் பஷீர் அகமது ஆப்கான் உள்ளிட்டோர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயலபட்டதன் காரணமாக முதல் முறையாக ஆஃப்கானிஸ்தான் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். .
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிரேய்க் எர்வின் தலைமையிலான இந்த டெஸ்ட் அணியில் நட்சத்திர வீரர்கள் சிக்கந்தர் ரஸா, சீன் வில்லியம்ஸ், பிளெஸ்ஸிங் முசரபானி, ரிச்சர்ட் ந்ங்கரவா, பிரையன் பென்னட் உள்ளிட்டோர் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர். மேற்கொண்டு ஜிம்பாப்வே டெஸ்ட் அணியிலும் 7 அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக பென் கரண் இந்த டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணியில் இடம்பிடித்துள்ளார். அவரைத் தவிர்த்து மூன்னாள் வீரர் அலெய்ஸ்டர் காம்பெல்லின் மகன் ஜானதன் காம்பெல்லிற்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு ட்ரெவர் குவாண்டு, டகுட்ஸ்வா சதைரா, நியூமன் நியாம்ஹுரி, நியாஷா மாயாவோ மற்றும் தடிவானாஷே மருமணி உள்ளிட்ட அறிமுக வீரர்களும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஜிம்பாப்வே டெஸ்ட் அணி: கிரேக் எர்வின் (கே), பென் கரன், பிரையன் பென்னட், ஜானாதன் காம்ப்பெல், டகுட்ஸ்வா சதைரா, ஜெய்லார்ட் கும்பி, ட்ரெவர் குவாண்டு, டகுட்ஸ்வானாஷே கைடானோ, தடிவானாஷே மருமணி, பிராண்டன் மவுடா, நியாஷா மாயாவோ, பிளஸ்ஸிங் முசரபானி, டியான் மேயர்ஸ், ரிச்சர்ட் ந்ங்கராவா, நியூமன் நியாம்ஹுரி, சிக்கந்தர் ராசா, சீன் வில்லியம்ஸ்.
Also Read: Funding To Save Test Cricket
ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணி: ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மத் ஷா (துணை கேப்டன்), இக்ராம் அலிகைல், அஃப்சர் ஜசாய், ரியாஸ் ஹசன், செதிகுல்லா அடல், அப்துல் மாலிக், பஹிர் ஷா, இஸ்மத் ஆலம், அஸ்மத்துல்லா உமர்சாய், ஜாஹிர் கான், ஜியா உர் ரஹ்மான், ஜாஹிர் ஷெஹ்சாத், ரஷித் கான், யாமின் அஹ்மத்சாய், பஷீர் அஹ்மத், நவீத் சத்ரான், ஃபரீத் அஹ்மத்
Win Big, Make Your Cricket Tales Now