ZIM vs SA: ஜிம்பாப்வே டெஸ்ட் அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான கிரேய்க் எர்வின் தலைமையில் ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

Zimbabwe vs South Africa Test Series 2025: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணியில் வின்சென்ட் மஸகட்சா, ட்ரேவர் குவண்டு மற்றும் அறிமுக வீரர் குண்டாய் மடிகிமு ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதித்துள்ளது. இதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி இம்மாத இறுதியில் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி ஜூன் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையடுத்து இத்தொடருக்கான டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அணியில் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ், லெசெகோ செனோக்வானே, கோடி யூசுஃப், டெவால்ட் பிரீவிஸ் மற்றும் ப்ரீனெலன் சுப்ரயன் உள்ளிட்ட அறிமுக வீரர்கள் இடம்பிடித்துள்ள நிலையில், ஐடன் மார்க்ரம், காகிசோ ரபாடா, மார்கோ ஜான்சன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க தொடருக்கான ஜிம்பாப்வே அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிரெய்க் எர்வின் தலைமையிலான இந்த அணியில் காயத்திலிருந்து மீண்டுள்ள ட்ரெவர் குவாண்டு, வின்சென்ட் மஸகட்ஸா ஆகியோருடன் அறிமுக வீரர் குண்டாய் மடிகிமுவுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து பிரின்ஸ் மஸ்வாரே மற்றும் டகுட்ஸ்வானாஷே கைடானோ ஆகியோரும் அணியில் இணைந்துள்ள நிலையில், பென் கரண் காயம் காரணமாக டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேசம் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பென் கரண் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறியதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேசமயம் நட்சத்திர ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ரசாவுக்கும் இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. இருப்பினும் பிரையன் பென்னட், சீன் வில்லியம்ஸ், வெஸ்லி மதேவெரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.
ஜிம்பாப்வே டெஸ்ட் அணி: கிரேக் எர்வின் (கேப்டன்), பிரையன் பென்னட், தனகா சிவாங்கா, ட்ரெவர் குவாண்டு, டகுட்ஸ்வானாஷே கைடானோ, வெஸ்லி மாதேவெரே, கிளைவ் மடாண்டே, வின்சென்ட் மசெகேசா, வெலிங்டன் மசகட்சா, பிரின்ஸ் மஸ்வாரே, குண்டாய் மாட்டிகிமு, ப்ளெஸிங் முசரபானி, நியூமன் நியாம்ஹுரி, தஃபட்ஸ்வா சிகா, நிக்கோலஸ் வெல்ச், சீன் வில்லியம்ஸ்
Also Read: LIVE Cricket Score
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டெவால்ட் ப்ரீவிஸ், கார்பின் போஷ், டோனி டி சோர்ஜி, ஜுபைர் ஹம்சா, கேசவ் மஹாராஜ், குவேனா மபாகா, வியான் முல்டர், லுங்கி இங்கிடி, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், லெசெகோ செனோக்வானே, ப்ரீனெலன் சுப்ரயன், கைல் வெர்ரைன் மற்றும் கோடி யூசுஃப்.
Win Big, Make Your Cricket Tales Now