ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இந்தாண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம்பிடித்துள்ளன. இதில் இந்திய அணி உள்ள குழுவில் பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா மற்றும் கனாடா அணிகள் இடம்பிடித்துள்ளன.
அதன்படி ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது ஜூன் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடர் முடிந்த கையோடு இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது ஜூலை 6ஆம் தேதி தொடங்கி ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
Trending
மேலும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அறிவிப்பை பிசிசிஐ மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் இணைந்து இன்று வெளியிட்டுள்ளது. உலகக்கோப்பை முடிந்த கையோடு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்தியா - ஜிம்பாப்வே தொடர் அட்டவணை
- முதல் டி20 ஜூலை 6ஆம் தேதி
- 2வது டி20 ஜூலை 7ஆம் தேதி
- 3வது டி20 ஜூலை 10ஆம் தேதி
- 4வது டி20 ஜூலை 13ஆம் தேதி
- 5வது டி20 ஜூலை 14ஆம் தேதி
Win Big, Make Your Cricket Tales Now