Advertisement
Advertisement
Advertisement
Advertisement

ipl 2024 eliminator

பிளே ஆஃப் சுற்றில் அதிக விக்கெட்டுகள்; புதிய மைல் கல்லை எட்டினார் அஸ்வின்!
Image Source: Google

பிளே ஆஃப் சுற்றில் அதிக விக்கெட்டுகள்; புதிய மைல் கல்லை எட்டினார் அஸ்வின்!

By Bharathi Kannan May 23, 2024 • 15:14 PM View: 92

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ராஜத் படித்த 34 ரன்களும், விராட் கோலி 33 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Related Cricket News on ipl 2024 eliminator

Advertisement
Advertisement