srh vs csk
இந்த தோல்வியில் இருந்து எங்களால் மீண்டு வர முடியும் - பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோரது அரைசதத்தின் மூலமும், ஷிவம் தூபேவின் அபாரமான ஃபினிஷிங்கின் மூலமும் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 98 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 52 ரன்களையும், ஷிவம் தூபே 39 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர்கள் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, சன்ரைசர்ஸ் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Related Cricket News on srh vs csk
-
சதம் அடிப்பது குறித்து நான் எதையும் யோசிக்கவில்லை - ருதுராஜ் கெய்க்வாட்!
இந்த போட்டியில் நான் சதத்தை பற்றி யோசிக்கவில்லை. நாங்கள் 220 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும் என்றே விரும்பினோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸை வீழ்த்தி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பிய சிஎஸ்கே!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் 2024: சதத்தை தவறவிட்ட ருதுராஜ் கெய்க்வாட்; சன்ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 98 ரன்களில் விக்கெட்டை இழந்து சதடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ...
-
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன்!
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 46ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2024: புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. ...
-
ரவீந்திர ஜடேஜாவை அப்பீலை வாபஸ் பெற்ற பாட் கம்மின்ஸ்; காட்டமாக கேள்வி எழுப்பிய முகமது கைஃப்!
ரவீந்திர ஜடேஜா பந்தை தடுத்தாக செய்யப்பட்ட அப்பீலை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் வாபஸ் பெற்றது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. ...
-
யுவராஜ் சிங், பிரையன் லாரா மற்றும் எனது அப்பாவிற்கு நன்றி - அபிஷேக் சர்மா!
பவர்பிளே ஓவர்களில் நாங்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் எங்களால் எளிதாக வெற்றி பெற முடியும் என்று எண்ணினோம் என ஆட்டநாயகன் விருதை வென்ற அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
அபிஷேக் சர்மாவுக்கு பந்துவீச ஒருபோதும் விரும்ப மாட்டேன் - பாட் கம்மின்ஸ்!
அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோருக்கு எதிராக பந்துவீச ஒருபோதும் நான் விரும்ப மாட்டேன் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
பவர் பிளே ஓவர்களில் நாங்கள் அதிகமான ரன்களை கொடுத்துவிட்டோம் - ருதுராஜ் கெய்வாட்!
ஒரு கேட்ச்சை தவற விட்டோம். ஒரு ஓவரில் ரன்களை வாரி வழங்கினோம். இருப்பினும் போட்டியை நாங்கள் 19ஆவது ஓவர் வரை எடுத்துச் சென்றது மகிழ்ச்சியளிக்கிறது என சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ஐடன் மார்க்ரம் அரைசதம்; சிஎஸ்கேவை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
4,0,6,0,6,6,4 - முகேஷ் சௌத்ரியை பந்தாடிய அபிஷேக் சர்மா - வைரலாகும் காணொளி!
சிஎஸ்கே அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா ஒரே ஓவரில் 27 ரன்களை குவித்த காணொளி வைரலாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: பேட்டர்கள் தடுமாற்றம்; ஹைதராபாத் அணிக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சிஎஸ்கே!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 166 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
புவனேஷ்வர் குமார் ஓவரில் சிக்ஸர் விளாசிய கெய்க்வாட் - காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அடித்த சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி உள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24