usa cricket
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த மிலிந்த் குமார்!
ஐசிசி உலகக்கோப்பை லீக் 2 கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்ததின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணியில் ஆண்ட்ரிச் கௌஸ், கேப்டன் மொனாங்க் படேல் ஆகியோர் சொற்ப ரன்களுக்கும், சமித் படேல் 48 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த சாய்தேஜா முக்காமல்லா - மிலிந்த் குமார் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்தனர்.
Related Cricket News on usa cricket
-
அமெரிக்க ஒருநாள் & டி20 அணி அறிவிப்பு; கோரி ஆண்டர்சன் அதிரடி நீக்கம்!
உலகக்கோப்பை லீக் 2 ஒருநாள் தொடர் மற்றும் முத்தரப்பு டி20 தொடர்களுக்கான அமெரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர் கோரி ஆண்டர்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ...
-
T20 WC 2024: ஜோன்ஸ், நேத்ரவால்கர் அபாரம்; சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை அப்செட் செய்து அமெரிக்கா வரலாற்று வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் அமெரிக்க அணி சூப்பர் ஓவரில் வெற்றிப்பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. ...
-
அமெரிக்க டி20 அணியில் இடம்பிடித்த கோரி ஆண்டர்சன்; உன்முக் சந்திற்கு வாய்ப்பு மறுப்பு!
நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான கோரி ஆண்டர்சன் அமெரிக்க டி20 அணியில் இடம்பிடித்து சர்வதேச கிரிக்கெட்டிற்கு மீண்டும் கம்பேக் கொடுக்கவுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2024: டலாஸ், ஃபுளோரிடா, நியூயார்க்கில் போட்டிகள்!
அமெரிக்காவில் பிரபலமான நியூயார்க், ஃபுளோரிடா மற்றும் டாலஸ் ஆகிய நகரங்களில் டி20 உலகக்கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு ஐசிசி திட்டமிட்டுள்ளது. ...
-
ஜூன் 4-இல் தொடங்கும் டி20 உலகக்கோப்பை!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்த நடத்தும் 9ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்தாண்டு ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இங்கிலாந்திற்கு மாற்றப்படும் டி20 உலகக்கோப்பை 2024?
2024 டி20 உலகக்கோப்பை தொடரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் இங்கிலாந்துக்கு மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக்கோப்பை!
வருகின்ற 2024ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறுமென சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ...
-
அமெரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனாக இந்தியர் நியமனம்!
அமெரிக்க கிரிக்கெட்டின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக மொனாக் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஸ்டீவன் டெய்லர் அதிரடி; நேபாளத்தை வீழ்த்தியது அமேரிக்கா!
நேபாள் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் அமெரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24