Abdullah shafique
SL vs AUS, 1st Test: அப்துல்லா ஷஃபிக் அபாரம்; இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த 16ஆம் தேதி காலேவில் தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 222 ரன்கள் அடித்தது. இலங்கை அணியில் தினேஷ் சண்டிமால் மட்டுமே சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். சண்டிமால் 76 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர வேறு யாரும் அரைசதம் அடிக்கவில்லை. ஓபனிங்கில் ஒஷாடா ஃபெர்னாண்டோ (35) மற்றும் பின்வரிசையில் மஹீஷ் தீக்ஷனா (38) ஆகிய இருவரும் சிறிய பங்களிப்பு செய்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசாமை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. தனி நபராக பொறுப்புடன் பேட்டிங் ஆடிய பாபர் அசாம் சதமடித்தார். பாபர் அசம் 119 ரன்களை குவித்தார். பாபரின் சதத்தால் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 218 ரன்கள் அடித்தது. பாகிஸ்தான் அடித்த 218 ரன்களில் 119 ரன்கள் பாபர் அசாம் அடித்தது. எஞ்சிய 99 ரன்கள் தான் மற்ற வீரர்கள் அனைவரும் இணைந்து அடித்தது.
Related Cricket News on Abdullah shafique
-
SL vs PAK, 1st Test: அப்துல்லா ஷஃபிக் சதம்; வெற்றியை நோக்கி பாகிஸ்தான்!
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் 4ஆம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி, 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்துள்ளது. ...
-
PAK vs AUS, 3rd Test: அப்துல்லா, அசார் நிதான ஆட்டம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs AUS, 3rd Test (Day 2): அப்துல்லா, அசார் நிதாம்; முன்னிலை நோக்கி பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்களை சேர்த்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2022 குவாலிஃபையர் 2: இஸ்லாமாபாத்திற்கு 169 ரன்கள் இலக்கு!
பிஎஸ்எல் 2022 குவாலிஃபையர் 2: இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 169 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs PAK, 1st Test: அபித், அப்துல்லா அதிரடியில் பாகிஸ்தான் அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24