Au w vs en w odi
நியூசிலாந்து vs இலங்கை, மூன்றாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
New Zealand vs Sri Lanka 3rd ODI Dream11 Prediction: இலங்கை அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டியிலும் நியூசிலாந்து அணியானது அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி11) ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை கைப்பற்றிய நிலையில், இப்போட்டியிலும் வெற்றி பெற்று இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்ய முயற்சிக்கும். மறுபக்கம் இலங்கை அணி ஒயிட்வாஷ் தோல்வியைத் தவிர்பதற்காக தீவிரமாக போராடும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Au w vs en w odi
-
INDW vs IREW: ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா!
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 40 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை பூர்த்தி செய்வார். ...
-
இணையத்தில் வைரலாகும் மிட்செல் சான்ட்னர் செய்த ரன் அவுட் காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் அடுத்தடுத்த போட்டிகளில் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் செய்த ரன் அவுட் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்திய மகளிர் vs அயர்லாந்து மகளிர், முதல் ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி 10) ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்த நாதன் ஸ்மித் - வைரல் காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீரர் நாதன் ஸ்மித் பவுண்டரில் எல்லையில் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் மார்ட்டின் கப்தில்!
நியூசிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். ...
-
அசலங்காவின் கேட்ச்சின் மூலம் சதத்தை தவறவிட்ட ரச்சின் ரவீந்திரா - காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பிடித்த அசத்தலான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
NZ vs SL, 2nd ODI: இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் வென்றது நியூசிலாந்து!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. ...
-
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த மஹீஷ் தீக்ஷனா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷனா ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
-
NZ vs SL, 2nd ODI: ரவீந்திரா, சாப்மேன் அரைசதம்; இலங்கை அணிக்கு 256 ரன்கள் டார்கெட்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 256 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நியூசிலாந்து vs இலங்கை, இரண்டாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி 08) ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
NZ vs SL, 1st ODI: வில் யங், மேட் ஹென்றி அசத்தல்; இலங்கையை பந்தாடியது நியூசிலாந்து!
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
கமிந்து மெண்டிஸை ரன் அவுட் செய்த மிட்செல் சான்ட்னார் - வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸை ரன் அவுட்டாக்கிய சம்பவம் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
NZ vs SL, 1st ODI: இலங்கை அணியை 178 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 178 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
நியூசிலாந்து vs இலங்கை, முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி 05) வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24