Aus vs ind bgt series
இந்திய அணி 260 ரன்களில் ஆல் அவுட்; டிராவை நோக்கி நகரும் காபா டெஸ்ட்!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைக் குவித்து அசத்தியது.
இதில் அதிகபட்சாமாக டிராவிஸ் ஹெட் 152 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், ஷுப்மன் கில் ஒரு ரன்னிலும், விராட் கோலி 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்தும் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Aus vs ind bgt series
-
அசத்தலான கேட்ச்சின் மூலம் ரசிகர்களை வியக்க வைத்த மிட்செல் மார்ஷ்; வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மிட்செல் மார்ஷ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ...
-
ஆஸ்திரேலியா vs இந்தியா, மூன்றாவது டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நாளை மறுநாள் (டிசம்பர் 14) நடைபெறவுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs இந்தியா, முதல் டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பார்டர் கவாஸ்கர் கோப்பை 2024: ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24