அசத்தலான கேட்ச்சின் மூலம் ரசிகர்களை வியக்க வைத்த மிட்செல் மார்ஷ்; வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மிட்செல் மார்ஷ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரது சதங்கள் காரணமாக முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைச் சேர்த்து அல் அவுட்டானது.
இதில் அதிகபட்சாமாக டிராவிஸ் ஹெட் 152 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களையும், அலெக்ஸ் கேசி 70 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 28 ஓவர்கள் வீசி 76 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இந்திய அணியானது அஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
Trending
இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், ஷுப்மன் கில் ஒரு ரன்னிலும், விராட் கோலி 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்தும் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனல் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்களை மட்டுமே சேர்த்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக இப்போட்டியானது தடைபட்டுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசிய நிலையில் அந்த ஓவரின் முதல் பந்தையே ஷுப்மன் கில் கவர் டிரைவ் அடிக்கும் முயற்சியில் பேட்டை வீசினார். ஆனால் பந்து ஷுப்மன் கில்லின் பேட்டில் பட்டு கல்லி திசையை நோக்கி சென்றது.
Feeling a bit of Déjà vu watching these two catches from the Flying Bison #AUSvIND pic.twitter.com/Ihf4jbRo5v
— cricket.com.au (@cricketcomau) December 16, 2024அச்சமயத்தில் அங்கு ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த மிட்செல் மார்ஷ் யாரும் எதிர்பாராத வகையில் அபாரமான டைவை அடித்து கேட்ச் பிடித்து அசத்தினார். இதனால் இப்போட்டியில் ஒரு ரன்னை மட்டுமே எடுத்திருந்த ஷுப்மன் கில் தனது விக்கெட்டி இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இந்நிலையில் தான் மிட்செல் மார்ஷ் பிடித்த இந்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஜோஷ் ஹேசில்வுட்.
Also Read: Funding To Save Test Cricket
இந்தியா பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா (கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, ஆகாஷ்தீப், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
Win Big, Make Your Cricket Tales Now