Csa t20 challenge
டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை நிகழ்த்திய டெவால்ட் பிரீவிஸ்!
தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டைடன்ஸ் அணியும், நைட்ஸ் அணியும் மோதிய ஆட்டம், தற்போது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய டைடன்ஸ் அணி வீரர் டெவால்ட் பிரீவிஸ் அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் சதமடித்து அசத்தினார். டி20 கிரிக்கெட்டில் இதுவும் சாதனையாகும்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடி இவர் 57 பந்துகளில் 284.21 ஸ்ட்ரைக் ரேட்டுடன் தலா 13 பவுண்டரி, 13 சிக்ஸர் உட்பட 162 ரன்களை குவித்து உலக சாதனை படைத்துள்ளார். ஐபிஎலில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய கிறிஸ் கெய்ல் 175 ரன்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது.
Related Cricket News on Csa t20 challenge
-
ஐபிஎல் அணிகள், வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ!
அயல்நாட்டு டி20 தொடர்களுக்காக ஐபிஎல் அணிகள் போட்டு வைத்திருந்த திட்டத்திற்கு பிசிசிஐ கடிவாளம் போட்டுள்ளது. ...
-
மும்பை அணியில் ரஷித் கான்; சென்னை அணிக்கு ஃபாஃப் டூ பிளெசிஸ்!
தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸின் கேப் டவுன் அணி ரஷித் கான், டெவால்ட் ப்ரீவிஸ், லியாம் லிவிங்ஸ்டோனை ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் களமிறங்கும் சிஎஸ்கே!
தென் ஆப்பிரிக்காவில் அடுத்த வருடம் தொடங்கவுள்ள டி20 போட்டியில் ஓர் அணியை வாங்குவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட நான்கு ஐபிஎல் அணிகள் ஆர்வம் தெரிவித்துள்ளன. ...
-
சிஎஸ்ஏ டி20 சேலஞ்ச் 2022: கோப்பையை வென்றது ராக்ஸ்!
டைட்டன்ஸுக்கு எதிரான சிஎஸ்ஏ டி20 சேலஞ்ச் இறுதிப்போட்டியில் ராக்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47