Dane paterson
பாக்ஸிங் டே டெஸ்ட்: கார்பின் போஷ் அசத்தல்; முன்னிலை நோக்கி நகரும் பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தா அணியில் காம்ரன் குலாம் அரைசதம் கடந்த நிலையில் மற்ற வீரர்கள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாஅமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் ஓரளவு தாக்குப்பிடித்து 54 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டும், கார்பின் போஷ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐடன் மார்க்ரம் மற்றும் டோனி டி ஸோர்ஸி இணை தொடக்கம் கொடுத்தனர்.
Related Cricket News on Dane paterson
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: பாகிஸ்தான் 211 ரன்னில் ஆல் அவுட்; பேட்டிங்கில் தடுமாறும் தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 129 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
SA vs SL: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த டேன் பேட்டர்சன்!
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் பிளேயிங் லெவனில் தான் சேர்க்கப்பட்டது குறித்து விமர்சித்தவர்களுக்கு டேன் பேட்டர்சன் தனது பதிலடியைக் கொடுத்துள்ளார். ...
-
SA vs SL, 2nd Test: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியதுடன் டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24