If india
IND vs BAN: முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு; ரிஷப் பந்த், யாஷ் தயாளிற்கு வாய்ப்பு!
இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் அனைவரும் நிச்சயமாக உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வலியுறுத்தியதன் காரணமாக, ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ரிஷப் பாந்த், குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சார்ஃப்ராஸ் கான் முக்கிய வீரர்கள் அனைவரும் விளையாடினர்.
Related Cricket News on If india
-
துலீப் கோப்பை 2024: இந்தியா ஏ அணியை வீழ்த்தி இந்தியா பி அணி அபார வெற்றி!
இந்தியா ஏ அணிக்கு எதிரான துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பி அணியானது 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட்; டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்!
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
துலீப் கோப்பை 2024: வலிமையான முன்னிலையில் இந்தியா பி அணி!
இந்தியா ஏ அணிக்கு எதிரான துலீப் கோப்பை லீக் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய பி அணி 240 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
துலீப் கோப்பை 2024: மானவ் சுதர் அபாரம்; இந்தியா சி அணி அசத்தல் வெற்றி!
இந்தியா டி அணிக்கு எதிரான துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சி அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
துலீப் கோப்பை 2024: இரட்டை சதத்தை தவறவிட்ட முஷீர் கான்; நிதானம் காட்டும் இந்தியா ஏ!
இந்தியா பி அணிக்கு எதிரான துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா பி அணி 134 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
துலீப் கோப்பை 2024: தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஷுப்மன் கில்!
எதிர்வரும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் டீம் ஏ அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்திய அணியின் ஆல் டைம் லெவனை தேர்வு செய்த கௌதம் கம்பீர்; ரோஹித், பும்ராவுக்கு இடமில்லை!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான கௌதம் கம்பீர் தனது ஆல் டைம் சிறந்த லெவன் அணியை உருவாக்கியுள்ளார். ...
-
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அண்டர் 19 அணி அறிவிப்பு; சமித் டிராவிட்டிற்கு இடம்!
ஆஸ்திரேலிய அண்டர்19 அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் நான்கு நாள் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அண்டர் 19 அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
தனது ஆல் டைம் சிறந்த லெவனில் தேனியை சேர்க்காதது குறித்து தினேஷ் கார்த்திக் விளக்கம்!
தான் தேர்வு செய்த ஆல்டைம் லெவன் அணியில் விக்கெட் கீப்பரை தேர்வு செய்யவில்லை என்பது தனது தவறு என்றும், அணியை உருவாக்கும் போது விக்கெட் கீப்பரை சேர்க்க மறந்துவிட்டதாகவும் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் விளக்கமளித்துள்ளார். ...
-
இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்தியா!
அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
வங்கதேச டெஸ்ட் தொடரில் இருந்தும் முகமது ஷமி விலகல்?
எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணியில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
பார்டர்-கவாஸ்கர் கோப்பை மீண்டும் எங்கள் கைகளில் இருக்கும் - மிட்செல் ஸ்டார்க்!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை போல பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் இந்தியாவும் சமமான சவாலை கொடுப்பதாக ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளார். ...
-
ரோஹித் சர்மாவுடன் இவர் தான் தொடக்க வீரராக களமிறங்குவார் - தினேஷ் கார்த்திக் உறுதி!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மாவுடன் ஷுப்மான் கில் மட்டுமே தொடக்க வீரராக களமிறங்குவார் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
-
சொந்த மண்ணில் தொடரை வெல்ல வேண்டியது அவசியம் - ஜோஷ் ஹேசில்வுட்!
இந்த முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரை சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா கைப்பற்ற வேண்டும் என அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24