
வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 20 முதல் 25ஆம் தேதிவரை ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில், நேற்றைய தினம் இப்போட்டியும் ராவல்பிண்டிக்கு மாற்றப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் நாளை இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி அணியின் தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷஃபிக், சையும் அயூப் ஆகியோரும், மூறாவது வரிசையில் கேப்டன் ஷான் மசூத் களமிறங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாபர் ஆசாம் மூன்றாம் வரிசையில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு நான்காம் இடத்திலேயே களமிறங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.