
இந்திய அணியின் தொடக்க வீரராக அறியப்பட்டபிருத்வி ஷா தற்போது தனது கேரியரில் மிக மோசமான நிலையை சந்தித்து வருகிறார். முதலில் மோசமான உடற்தகுதி காரணமாக மும்பை ரஞ்சி அணியில் இருந்து வெளியேற்றப்பட்டர். அதன்பின் நடந்து முடிந்த ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் அவரை வாங்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. தற்போது, நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரிலும் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
இந்திய அண்டர்19 அணியின் கேப்டனாக செயல்பட்டு, யு19 உலகக்கோப்பை வென்றதன் மூலம் இந்திய அணிக்காக அறிமுகமான பிரித்வி ஷா, தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக சச்சினுடன் ஒப்பிட்டப்பட்டார். ஆனால் அதன்பின் மோசமான உடற்தகுதி, ஃபார்ம் இழப்பு என அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்து வந்த பிரித்வி ஷா தற்சமயம் உள்ளூர் போட்டிகளில் கூட ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறுவதால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், விராட் கோலியை தனது உடற்தகுதியில் ரோல் மாடலாக மாற்றுமாறு பிரித்வி ஷாவுக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “பிரித்வி ஷாவுக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்ன நடந்தது என்பதை புரிந்துகொண்டு அவர் தனது வாழ்க்கையை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வது என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.