Rcb vs kkr
இது தொடரின் ஆரம்பம் மட்டுமே - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. அதன்படி பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக நட்சத்திர வீரர் விராட் கோலி 83 ரன்களைச் சேர்த்தார். கேகேஆர் அணி தரப்பில் ஆண்ட்ரே ரஸல் மற்றும் ஹர்ஷித் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் - சுனில் நரைன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தைக் கொடுத்தனர். இதனால் முதல் 6 ஓவர்களிலேயே அந்த அணி 85 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் சுனில் நரைன் 47 ரன்களுக்கும், பில் சால்ட் 30 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயரும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன், 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 50 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
Related Cricket News on Rcb vs kkr
-
கிறிஸ் கெயில், எம் எஸ் தோனி சாதனையை உடைத்த விராட் கோலி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஆர்சிபி அணிக்காக அதிக சிக்சர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ...
-
பேட்டிங், பவுலிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இன்றைய போட்டியில் நாங்கள் நினைத்தது போன்று எதுவும் நடக்கவில்லை. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே ஏற்பட்ட சில தவறுகள் காரணமாக இந்த தோல்வியைச் சந்தித்துள்ளோம் என ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: வெங்கடேஷ், நரைன் அதிரடியில் ஆர்சிபியை வீழ்த்தியது கேகேஆர்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
விராட் கோலியை கட்டியணைந்த கௌதம் கம்பீர்; வைரலாகும் காணொளி!
கேகேஆர் அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர், ஆர்சிபி நட்சத்திர வீரர் விராட் கோலியை கட்டியணைத்து நலம் விசாரித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: விராட் கோலி அதிரடியில் தப்பிய ஆர்சிபி; கேகேஆர் அணிக்கு 183 ரன்கள் இலக்கு!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஒரு அணியாக செயல்பட்டால் நிச்சயம் முடிவு நமக்கு சாதகமாக அமையும் - நிதிஷ் ராணா!
உங்களுடைய ஓய்வு அறையில் அனைவருமே மிகச் சிறந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினால் நிச்சயம் அது போட்டியின் போது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கேகேஆர் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா தெரிவித்துள்ளார். ...
-
என் குழந்தைக்கும் என் மனைவிக்கும் இந்த விருதை சமர்ப்பிக்க நினைக்கிறேன் - வருண் சக்ரவர்த்தி!
புதிதாய் பிறந்த என் குழந்தைக்கும் என் மனைவிக்கும் இந்த விருதை சமர்ப்பிக்க நினைக்கிறேன். ஐபிஎல் முடிந்த பிறகு குழந்தையைப் பார்ப்பேன் என்று வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் இந்தத் தோல்விக்கு தகுதியானவர்கள் - விராட் கோலி!
உண்மையைச் சொல்வது என்றால் நாங்கள்தான் ஆட்டத்தை அவர்களிடம் ஒப்படைத்தோம் என ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஆர்சிபியை வீழ்த்தி கேகேஆர் அசத்தல் வெற்றி!
ஆர்சிபிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: ராய், ராணா அதிரடி; ஆர்சிபிக்கு 201 டார்கெட்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
6,6,6,0,6: ஷஃபாஸ் அஹ்மத் ஓவரை பிரித்து மேய்ந்த ஜேசன் ராய்!
ஆர்சிபிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணி வீரர் ஜேசன் ராய் அடுத்தடுத்து 4 சிக்சர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2022: கேகேஆரை வீழ்த்தி ஆர்சிபி த்ரில் வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24