Will brown
பிபிஎல் 2024-25: கிறிஸ் லின் அதிரடியில் ரெனிகேட்ஸை பந்தாடியது ஸ்டிரைக்கர்ஸ்!
14ஆவது சீசன் பிக் பேஷ் லீக் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து களமிறங்கியது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு ஜோஷ் பிரௌன் மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்குர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபிரேசர் மெக்குர்க் ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டிம் செய்ஃபெர்டும் 4 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் ஜோஷ் பிரௌனுடன் இணைந்த ஜேக்கப் பெத்தெல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய ஜோஷ் பிரௌன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Related Cricket News on Will brown
-
முதல் ஓவரிலேயே 26 ரன்களை குவித்து மிரட்டிய ஜோஷ் பிரௌன்; வைரலாகும் காணொளி!
கரீபியன் மேக்ஸ் 60 தொடரில் கரீபியன் டைக்கர்ஸ் அணிக்காக விளையாடிய ஜோஷ் பிரௌன் இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே 26 ரன்களைக் குவித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
AUSW vs SAW, Only Test: சதத்தை தவறவிட்ட அலிசா ஹீலி; வலிமையான முன்னிலையில் ஆஸ்திரேலியா!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
பிபிஎல் 13: இரண்டாவது முறையாக கோப்பையை வென்றவது பிரிஸ்பேன் ஹீட்!
சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் இறுதிப்போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. ...
-
பிபிஎல் 13: 10 பாவுண்ட்ரி, 12 சிக்சர்கள்..சதமடித்து அசத்திய ஜோஷ் பிரௌன்; இறுதிப்போட்டியில் பிரிஸ்பேன்!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் சேலஞ்சர் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24