Womens big bash league 2024
WBBL 2024: ஜெஸ் ஜோனசென் போராட்டம் வீண்; பிரிஸ்பேனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது மெல்போர்ன்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த மகளிர் பிக் பேஷ் லீக் டி20 தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் முன்னேறின. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டியானது இன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கியா மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு ஹீலி மேத்யூஸ் - கர்ட்னி வெப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹீலி மேத்யூஸ் ஒருபக்கம் அதிரடியாக விளையாட, மறுமுனையில் கர்ட்னி வெப் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சோஃபி மோலினக்ஸ் 6 ரன்களிலும், டியண்டிரா டோட்டின் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் மெல்போர்ன் அணி 23 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Related Cricket News on Womens big bash league 2024
-
WBBL 2024: ஹீலி மேத்யூஸ் அரைசதம்; பிரிஸ்பேன் அணிக்கு 142 ரன்கள் இலக்கு!
மகளிர் பிக் பேஷ் லீக் 2024: பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 142 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WBL 2024: அபாரமான கேட்சை பிடித்த ஸ்மிருதி மந்தனா; வைரல் காணொளி!
மகளிர் பிக் பேஷ் லீக் தொடரில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஸ்மிருதி மந்தனா பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24