Zimbabwe vs South Africa 1st Test: ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் அறிமுக வீரர் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் மற்றும் கார்பின் போஷ் ஆகியோர் சதமடித்து அசத்தியுள்ளனர்.

Advertisement

தென் ஆப்பிரிக்க அணியானது தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஜூன் 28) புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்கள் டோனி டி ஸோர்ஸி ரன்கள் ஏதுமின்றியும், மேத்யூ பிரிஸ்ட்கீ 13 ரன்னிலும், டேவிட் பெடிங்ஹாம் ரன்கள் ஏதுமின்றியும், வியான் முல்டர் 17 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

இதனால் தென் ஆப்பிரிக்க அணி 55 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த அறிமுக வீரர்கள் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் மற்றும் டெவால்ட் பிரீவிஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரிட்டோரியஸ் அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்த, மறுபக்கம் பிரீவிஸும் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது. அதன்பின் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 51 ரன்களை எடுத்திருந்த பிரீவிஸ் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கைல் வெர்ரைனும் சோபிக்க தவற, பின்னர் வந்த கார்பின் போஷ் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதனால் பிரிட்டோரியஸ் மற்றும் போஷின் பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களை கடந்தது. அதன்பின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் 11 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 153 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேஷவ் மஹாராஜ் 21 ரன்களுக்கும், கோடி யூசுஃப் 27 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஆனால் மறுபக்கம் கார்பின் போஷ் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Also Read: LIVE Cricket Score

இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 418 ரன்களைக் குவித்துள்ளது. இதில் கார்பின் போஷ் 100 ரன்களுடனும், குவேனா மபாகா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஜிம்பாப்வே தரப்பில் டனகா சிவாங்கா 4 விக்கெட்டுகளையும், பிளெசிங் முசரபானி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News