SL vs BAN, 1st Test:  வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை வீரர் பதும் நிஷங்கா 13 ரன்களில் இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

Advertisement

இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் முஷ்ஃபிக்கூர் ரஹிம் அகியோர் அபாரமான ஆட்டத்தின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 495 ரன்களைக் குவித்தது. இதில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 148 ரன்களையும், முஷ்ஃபிக்கூர் ரஹிம் 163 ரன்களையும், லிட்டன் தாஸ் 90 ரன்களையும் சேர்த்தனர்.இலங்கை அணி தரப்பில் அசித்த ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், தரிந்து ரத்நாயக்க, பிரியானந்த் ரத்நாயக்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் லஹிரு உதாரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் லஹிரு உதாரா 29 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து நிஷங்காவுடன் ஜோடி சேர்ந்துள்ள தினேஷ் சண்டிமால் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் ஸ்கோரையும் உயர்த்தினர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிஷங்கா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். 

மறுபக்கம் தினேஷ் சண்டிமாலும் அரைசதத்தைப் பூர்த்தி செய்ய இருவரும் 150 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 54 ரன்கள் எடுத்த கையோடு தினேஷ் சண்டிமாலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸும் அபாரமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இதில் நிஷங்கா - மேத்யூஸ் ஆகியோர் 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், மேத்யூஸ் 3 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 39 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இரட்டை சதத்தை நெருங்கி கொண்டிருந்த பதும் நிஷங்காவும் 23 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 187 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

Also Read: LIVE Cricket Score

இதையடுத்து ஜோடி சேர்ந்துள்ள குசால் மெண்டிஸ் மற்றும் கேப்டன் தனஞ்செயா டி சில்வா இணை ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதன் காரணமாக மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 368 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் குசால் மெண்டிஸ் 37 ரன்களுடனும், தனஞ்செய டி சில்வா 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச தரப்பில் ஹசன் மஹ்மூத், தைஜுல் இஸ்லாம், நயீன் ஹசன், மொமினுல் ஹக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதையடுத்து 127 ரன்கள் பின் தங்கிய நிலையில் இலங்கை அணி நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News