நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியானது அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

Advertisement

இந்நிலையில் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கலேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியில் தொடகக் வீரர் பதும் நிஷங்கா ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் திமுத் கருணரத்னேவுடன் இணைந்த தினேஷ் சண்டிமால் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 124 ரன்களைச் சேர்த்து அசத்தினர். 

Advertisement

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கருணரத்னே 46 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தினேஷ் சண்டிமால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 16ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் அவரும் 116 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் கமிந்து மெண்டிஸ் இணையும் அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினார். 

இதன்மூலம் இலங்கை அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் 306 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் இலங்கை தரப்பில் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 78 ரன்களுடன், கமிந்து மெண்டிஸ் 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி தரப்பில் கேப்டன் டிம் சௌதி மற்றும் கிளென் பிலீப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து வலிமையான நிலையில் இலங்கை அணி நாளைய தினம் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News