டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட்டின் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள 3 வீரர்கள்!

Updated: Sun, May 11 2025 13:18 IST
Image Source: Google

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு பெற வாய்ப்புள்ளது. ஆனால் பிசிசிஐ அதிகாரிகள் விராட் கோலியின் ஓய்வு முடிவை ஏற்க மறுத்ததுடன் அவரின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும் கேட்டுகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் விராட் கோலி விளையாடுவாரா என்ற சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. ஒருவேளை இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னரே விராட் கோலி தனது ஓய்வு முடிவை அறிவிக்கும் பட்சத்தில், இந்திய டெஸ்ட் அணியில் நான்காம் இடத்தில் களமிறங்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

ஸ்ரேயாஸ் ஐயர்

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ஸ்ரேயாஸ் ஐயர். முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து நீக்கப்பட்ட அவர் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதான் காரணமாக அவருக்கு லெவனில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளனர். இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் அதில் ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்களுடன் 811 ரன்களை எடுத்துள்ளது. இதனால் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகும் பட்சத்தில் அவரது இடத்தை ஸ்ரேயாஸ் ஐய்ர் நிறப்புவார் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

சர்ஃபராஸ் கான்

உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரரான சர்பராஸ் கான் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். கடந்தாண்டு இந்திய டெஸ்ட் அணிக்காக அறிமுகமான இவர் தற்போது 6 டெஸ்ட் சர்வதேச போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்களுடன் 371 ரன்களைச் சேர்த்துள்ளார்.இதில் அவரது சிறந்த ஸ்கோர் 150 ரன்கள் ஆகும். முதல் தர கிரிக்கெட்டில், சர்பராஸ் 54 போட்டிகளில் 16 சதங்கள் மற்றும் 14 அரை சதங்களுடன் 4593 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் இந்திய அணியின் புதிய நான்காம் வரிசை வீரராக சர்ஃபராஸ் இருப்பார் என்று கூறப்படுகிறது. 

தேவ்தத் படிக்கல்

Also Read: LIVE Cricket Score

இந்த பட்டியலில் அடுத்த இடத்தை பிடிக்கும் வீரர் தேவ்தத் படிக்கல். இடதுகை பேட்டரான இவர் இந்திய அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவுள்ளார். ஆதேசமயாம் உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டில் 43 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2815 ரன்களையும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 33 போட்டிகளி விளையாடி 2071 ரன்களையும் அடித்துள்ளார். சமீபத்தில் கூட அவர் இந்திய டெஸ்ட் அணியின் ஒரு அங்கமாக இருந்திருந்தார். இதன் காரணமாக விராட் கோலி ஓய்வு பெறும் பட்சத்தில் அவரது இடத்தை நிரப்பும் வீரர்களில் ஒருவராகவும் தேவ்தத் படிக்கல் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை