ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (டிசம்பர் 14) தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா மற்றும் நாதன் மெக்ஸ்வீனி இணை தொடக்கம் கொடுத்தனர். ஆனால் மழை குறுக்கிட்டதன் காரணமாக முதல் நாள் ஆட்டம் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அச்சமயத்தில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்களை எடுத்திருந்தது. அதன்பின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் உஸ்மான் கவாஜாவும் 21 ரன்னிலும், நாதன் மெக்ஸ்வீனி 09 ரன்னிலும், மார்னஸ் லபுஷாக்னேவும் 12 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச இருவரது பார்ட்னர்ஷிப்பும் 200 ரன்களைத் தண்டியது. இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் தனது 9ஆவது டெஸ்ட் சதத்தையும், மறுப்பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டிவ் ஸ்மித் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 33ஆவது சதத்தையும் பதிவுசெய்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். அதன்பின் 12 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்திருந்த ஸ்டீவ் ஸ்மித்தும், 18 பவுண்டரிகளுடன் 158 ரன்களை எடுத்த நிலையில் டிராவிஸ் ஹெட்டும் என விக்கெட்டை இழக்க, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 405 ரன்களை எடுத்தது.

இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை அலெக்ஸ் கேரி 45 ரன்களுடனும், மிட்செல் ஸ்டார்க் 07 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் அலெக்ஸ் கேரி தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுமுனையில் விளையாடிய மிட்செல் ஸ்டார்க் 20 ரன்னிலும், நாதன் லையன் 2 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அலெக்ஸ் கேரி 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 70 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா  6 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News