ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 474 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Advertisement

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியில் நிதீஷ் ரெட்டி சதமடித்தும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஆரைசதம் அடித்தும் அசத்தியன் காரணமாக 369 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக நிதீஷ் ரெட்டி 114 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 82 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்காட் போலண்ட், பாட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லையன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Advertisement

இதனையடுத்து 105 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியானது தொடக்கம் முதலே சீரான வேகத்தில் விக்கெட்டை இழ்ந்து தடுமாறிய நிலையில் மார்னஸ் லபுஷாக்னே - பாட் கம்மின்ஸ் இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் அரைசதம் கடந்து அசத்திய லபுஷாக்னே 70 ரன்களில் விக்கெட்டை இழக்க, அரைசதத்தை நெருங்கிய பாட் கம்மின்ஸும் 41 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதத்தை தவற்விட்டார். அதன்பின் கடைசி விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த நாதன் லையன் மற்றும் ஸ்காட் போலண்ட் இணை இந்திய அணி பந்துவீச்சை சோதித்தனர். 

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்களைக் குவித்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய கடைசி நாள் ஆட்டத்தில் நாதன் லையன் 41 ரன்களுடனும், ஸ்காட் போலண்ட் 10 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் நாதன் லையன் 41 ரன்களில் விக்கெட்டை இழக்க, ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணிக்கு 340 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது.

அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோஹித் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 40 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழ்ந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேஎல் ராகுலும் அதோ ஓவரில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மற்றொரு நட்சத்திர வீரர் விராட் கோலியும் 29 பந்துகளில் 5 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் மீண்டும் அவுட்சைட் ஆஃப் பந்தில் விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதனால் ஐந்தாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 33 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. இந்திய அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து இந்திய அணி மேற்கொண்டு 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடனும், ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற இலக்குடனும் விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.  
 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News