இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் தேதி லீட்ஸில் நடைபெறவுள்ளது. 

Advertisement

இந்த தொடருக்கான இரு நாட்டு அணி வீரர்களும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் இன்றைய தினம் இங்கிலாந்து சென்றுள்ளனர். அதேசமயம் இந்த தொடருக்கான இந்திய அணியில் உள்ளூர் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன், கருண் நாயர், ஷர்தூல் தாக்கூர் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி லெவனில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Advertisement

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் தொடக்க வீரராக கேஎல் ராகுலை அவர் தேர்ந்தெடுத்துள்ளார், மேலும் மிடில் ஆர்டரில், கேப்டன் ஷுப்மான் கில்லுடன் சேர்ந்த அறிமுக வீரர் சாய் சுதர்ஷனுக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளார். 

மேற்கொண்டு அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்தையும், ஆல் ரவுண்டர்களாக நிதீஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, ஷர்தூல் தாக்கூர் ஆகியோரையும் தேர்ந்தெடுத்துள்ள ஆகாஷ் சோப்ரா, பந்துவீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் பிரஷித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இருப்பினும் அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் கருண் நாயருக்கு இடமளிக்கவில்லை என்பது பலரையும் ஆச்சரியப்படுத்திவுள்ளது. 

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த இந்திய அணி லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், பி சாய் சுதர்ஷன், ஷுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா

டெஸ்ட் தொடருக்கான அணிகள்

Advertisement

இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.

Also Read: LIVE Cricket Score

இங்கிலந்து அணி (முதல் டெஸ்ட்): பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஓல்லி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ்

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News