Advertisement

Afghanistan vs Papua New Guinea, Match 29 Dream11 Prediction, ICC T20 World Cup 2024: ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. இத்தொடரில் நாளை நடைபெறும் 29ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து பப்புவா நியூ கினி அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை ஏறத்தாழ உறுதிசெய்துள்ளது. அதேசமயம் பப்புவா நியூ கினி அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

AFG vs PNG: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs பப்புவா நியூ கினி
  • இடம் - பிரையன் லாரா கிரிக்கெட் மைதானம், டிரினிடாட்
  • நேரம் - ஜூன் 14, காலை 06 மணி (இந்திய நேரப்படி)

AFG vs PNG: Pitch Report

Advertisement

டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தின் பவுண்டரிகள் எல்லைகள் சிறியது என்பதால் இது பேட்டர்களுக்கு சாதகமான மைதானமாக கருதப்படுகிறது. அதேபோல் இந்த மைதானத்தில் சராசரி ஸ்கோரானது 160 முதல் 165 ஆக உள்ளதால் நிச்சயம் இப்போட்டியில் வானவேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு இந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு புதிய பந்தில் கூடுதல் பவுன்ஸ் இருக்கு என்பதால் அவர்களாலும் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

AFG vs PNG: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 00
  • ஆஃப்கானிஸ்தான் - 00
  • பப்புவா நியூ கினி - 00

AFG vs PNG: Live Streaming Details

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

Afghanistan vs Papua New Guinea Predicted Teams

ஆஃப்கானிஸ்தான்: இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், நஜிபுல்லா ஸத்ரான், அஸ்மத்துல்லா ஒமர்சாய், முகமது நபி, குல்பதின் நைப், ரஷீத் கான் (கே), கரீம் ஜனத், நூர் அகமது, நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி

பப்புவா நியூ கினியா: அசாத் வாலா (கே), டோனி உரா, லெகா சியாக்கா, செஸ் பாவ், ஹிரி ஹிரி, கிப்ளின் டோரிகா (வாரம்), சார்லஸ் அமினி, நார்மன் வனுவா, அலி நாவோ, சாட் சோப்பர், ஜான் கரிகோ

AFG vs PNG Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (கேப்டன்)
  • பேட்டர்ஸ்: லெகா சியாக்கா, இப்ராஹிம் ஸத்ரான்
  • ஆல்-ரவுண்டர்கள்: முகமது நபி, சார்லஸ் அமினி, செசே பாவ், அசாத் வாலா, அஸ்மத்துல்லா ஒமர்சாய்
  • பந்துவீச்சாளர்கள்: ரஷித் கான் (துணை கேப்டன்), நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கி
Advertisement

Afghanistan vs Papua New Guinea Fantasy Tips, AFG vs PNG: Dream11 Team Afghanistan vs Papua New Guinea: Predicted XIs, AFG vs PNG: Pitch Report, AFG vs PNG Live Streaming Details, AFG vs PNG: Head-to-Head, AFG vs PNG: Dream11 Prediction match 29 ICC T20 World Cup 2024

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News