Afghanistan vs Pakistan Match Prediction, UAE Tri-Series 1st T20: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கு தயாராகும் வகையில், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அணிகள் யுஏஇ அணியுடன் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளன.  

Advertisement

அதன்படி இந்த முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெற இருக்கும் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிக்ளுக்கும் இடையேயான இந்த போட்டி ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்களும், அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களும் இருப்பதால் இதில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

AFG vs PAK T20I: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs ஆஃப்கானிஸ்தான்
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்
  • நேரம்- ஆகஸ்ட் 29, இரவு 8.30 மணி (இந்திய நேரப்படி)

Sharjah Cricket Stadium Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 62 டி20 சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன, இதில் 35 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 27 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 142 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 251 ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

AFG vs PAK T20I Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 07
  • பாகிஸ்தான் - 04
  • ஆஃப்கானிஸ்தான் - 03
Advertisement

AFG vs PAK T20 : Where to Watch?

இந்த முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் காண முடியும்.

AFG vs PAK 1st T20: Player to Watch Out For

Advertisement

ரஹ்மானுல்லா குர்பாஸ், அஸ்மதுல்லா ஓரம்சாய், முகமது நபி மற்றும் ரஷீத் கான் ஆகியோர் ஆப்கானிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர்களாக இருக்கலாம், அவர்கள் மீது அனைவரின் பார்வையும் இருக்கும். இவர்களைத் தவிர, பாகிஸ்தான் அணியில் சாம் அயூப், முகமது நவாஸ், ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவூப் ஆகியோர் சிறப்பாக செயல்பட முடியும்.

Afghanistan vs Pakistan 1st T20I Probable Playing XI

Afghanistan Probable Playing XI: ரஹ்மானுல்லா குர்பாஸ், செதிகுல்லா அடல், இப்ராஹிம் ஸத்ரான், அஸ்மத்துல்லா ஒமர்சாய், குல்பதின்  நயீப், கரீம் ஜனத், முகமது நபி, ரஷித் கான் (கேப்டன்), முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.

Advertisement

Pakistan Probable Playing XI : ஃபகார் ஸமான், சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், ஹசன் நவாஸ், முகமது ஹாரிஸ், ஃபஹீம் அஷ்ரஃப், சல்மான் அலி அகா (கேப்டன்), முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது.

Afghanistan vs Pakistan Today's Match Prediction

கடந்த காலங்களில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட ஆஃப்கானிஸ்தான் அணியால் இந்தப் போட்டியை வெல்ல முடியும். ஆஃப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சு தாக்குதல் மிகவும் வலுவாக இருப்பதால் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Also Read: LIVE Cricket Score
Advertisement

AFG vs PAK 1st T20I Match Prediction, AFG vs PAK Pitch Report, Today's Match AFG vs PAK, AFG vs PAK Prediction, AFG vs PAK Predicted XIs, UAE T20I Tri-Series, Cricket Tips, Today Match Prediction, Today Cricket Match, Playing XI, Afghanistan vs Pakistan

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News