வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணியில் தன்ஸித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் உள்ளிட்டோர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் சௌமீயா சர்க்கார் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் இணை அபாரமாக விளையாடியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். 

Advertisement

இதில் மெஹிதி ஹசன் 77 ரன்களையும், சௌமீயா சர்க்கார் 73 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, இறுதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மஹ்முதுல்லா 84 ரன்னும், ஜக்கார் அலி 62 ரன்னும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்களை குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட் வீழ்த்தினர்.

Advertisement

இதையடுத்து, 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங், அலிக் அதனாஸ், கேப்டன் ஷாய் ஹோப் உள்ளிட்டோர் சொற்ப ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த கேசி கார்டி, அமீர் ஜாங்கு இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேசி கார்டி 95 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஆனால் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அமீன் ஜாங்கு தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுட்ன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 104 ரன்களையும், அவருக்கு துணையாக குடகேஷ் மோட்டி 44 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 46 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 325 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

இந்நிலையில் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய அமீர் ஜாங்கு தனது சதத்தைப் பதிவுசெய்ததன் மூலம் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக ஒருநாள் போட்டியில் சதமடித்து அசத்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக 1978ஆம் அண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் தனது அறிமுக ஆட்டத்தில் சதமடித்து அசத்தினார.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அப்போட்டியில் அவர் 136 பந்துகளில் 148 ரன்களைச் சேர்த்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க்து. இதுதவிர்த்து ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்திய 18ஆவது வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியைச் சேர்ந்த கேஎல் ராகுல் மட்டுமே இதுநாள் வரை அறிமுக ஒருநாள் போட்டியில் சதமடித்த இந்திய வீரர் எனும் சாதனையை தன்வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News