தற்பொழுது உலகக் கிரிக்கெட்டில் அடுத்த வருடம் டி20 உலகக்கோப்பை இருக்கிறது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கு பெறுகின்றன. 20 அணிகளும் இதற்கான முன்கூட்டியே தயாரிப்புகளில் ஈடுபட்டு இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது வரை டி20 உலகக்கோப்பைக்கு எப்படியான இந்திய அணி அனுப்பப்படும் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. மிக முக்கியமாக மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இடம் பெறுவார்களா என்பதுதான் பெரிய கேள்வி.

Advertisement

இந்த நிலையில் நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான அணி அறிவிப்பில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி பெயர்கள் இடம் பெறவில்லை. அவர்களே தங்களுக்கு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஓய்வு தேவை என்று கேட்டதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக ஒரு இளம் அணியை ஒரு உலகக் கோப்பைக்கு அனுப்பி வைக்க எந்த கிரிக்கெட் வாரியமும் விரும்பாது. ஆனால் தற்பொழுது வாய்ப்பு பெற்று விளையாடக்கூடிய எல்லோருமே இளம் வீரர்களாகவே இருக்கிறார்கள். 

Advertisement

இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸல் கூறுகையில், “ரோஹித், விராட் கோலி விஷயம் ஏன் விவாதம் ஆகிறது என்று எனக்கு தெரியவில்லை. சமூக ஊடகங்கள் கிரிக்கெட் திறன்களை கேள்விக்கு உள்ளாக்கலாம். டி20 உலக கோப்பைக்கு ரோஹித் சர்மா, விராட் கோலி இல்லாமல் ஒரு அணியை தேர்ந்தெடுத்தால், அது பைத்தியக்காரத்தனம்.

உலகக்கோப்பையில் அனுபவம் முக்கியமானது. 11 இளம் வீரர்களை போர்க்களத்திற்கு அனுப்ப முடியாது. இளம் இந்திய வீரர்கள் வாய்ப்பு கிடைக்கும் பொழுது ரன் குவிப்பார்கள். ஆனால் நெருக்கடியான நேரங்களில் அவர்கள் அப்படியே இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. இங்குதான் அனுபவ வீரர்கள் தேவை. ரோஹித் ஒரு பெரிய கேம் பிளேயர். விராட் கோலிக்கு எப்பொழுதும் பெரிய போட்டிகள் ரசிகர்களின் முன்னால் தேவை. இவர்கள் எப்பொழுதும் பதட்டமாக இருப்பதில்லை. 

கிரிக்கெட் வாரியங்கள் ஊடகங்களை கேட்டு முடிவு செய்யாது என்று நம்புவோம். நான் இந்த இருவருக்கும் ஒரு உலகக்கோப்பை நிச்சயம் கொடுப்பேன். பெரிய வீரர்களை மோசமாக நடத்தக் கூடாது. அவர்கள் இந்திய கிரிக்கெட்டுக்காக நிறைய செய்திருக்கிறார்கள். சச்சின் உடைய இடத்தை இருவரும் பூர்த்தி செய்து இருக்கிறார்கள். இவர்கள் டி20 உலக கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப் படாவிட்டால் அது பைத்தியக்காரத்தனம்” என கூறியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News