இந்திய அணி எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Advertisement

இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் அவர்களின் இடங்களை யார் நிரப்புவார், இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார், இத்தொடருக்கான இந்திய அணியில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

மேற்கொண்டு இத்தொடருக்கான இந்திய அணியும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் எதிவரும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் அறிமுக வீரர் அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்படவுள்ளதாகவும், அணியின் நடத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பிடிப்பது சந்தேகம் தான் என்றும் தகவல்கள் வெளியாகிவுள்ளன. இதில் அர்ஷ்தீப் சிங் இந்தியாவுக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். 

இந்நிலையில் தான் அவர் இந்திய டெஸ்ட் அணிக்காகவும் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள முகமது ஷமி பெரிதளவில் சோபிக்க தவறி வருவதன் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் இடம்பிடிப்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரம், இளம் பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா இந்தியா ஏ அணியுடன் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. 

Also Read: LIVE Cricket Score

மேற்கொண்டு இத்தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷுப்மன் கில்லும், அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பந்தும் நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தன்னை கேப்டன்சிக்கான போட்டியில் இருந்து விலக்கி கொண்டதை அடுத்து அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கபட உள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News