அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியனது இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அதேசமம் இத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியானது அரையிறுதிச் சுற்றுவரை முன்னேறிய நிலையிலும், அரையிறுதியில் இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. 

Advertisement

மேற்கொண்டு இந்தாண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியின் செயல்பாடுகளும் பெரிதளவில் சொல்லிக்கொள்ளும் படி இல்லாமல் இருந்தது. இருப்பினும் அந்த அணி தட்டுத்தடுமாறி அரையிறுதிச்சுற்று வரை முன்னேறி இருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு பொறுபேற்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மேத்யூ மோட் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், அவர் பதவியில் இருந்து விலகியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இதனையடுத்து, இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மார்கஸ் ட்ரெஸ்கோதிக் தற்காலிக தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் மாதம் நடைபெறும் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அவர் தலைமை பயிற்சியாளாராக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. அதேசமயம் அடுத்த தலைமை பயிற்சியாளரைத் தேடும் முயற்சியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளது. அதன்படி குமார் சங்கக்காரா, ஈயன் மோர்கன் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக ஜிம்பாப்வேவை சேர்ந்த ஆண்டி ஃபிளவர் சரியான தேர்வாக இருப்பார் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்த பட்டியலில் குமார் சங்கக்காராவின் பெயர் முதலிடத்தில் உள்ளார். மேற்கொண்டு அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லருடன் இணைந்து பணியாற்றியுள்ளதால் அவரின் தேர்வு சரியான ஒன்றுதான். மேலும் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கனும் தலைமை பயிற்சியாளருக்கான பரிந்துரையில் உள்ளார் என்பது எனக்கு எந்த சந்தோகமும் இல்லை. 

மேலும் ஆஸ்திரேலியவின் மைக்கேல் ஹைஸி, சைமன் கடிச் ஆகியோருக்கும் பயிற்சியாளருக்கான அனுபவம் உள்ளது. அவர்களுடன் ஜானதன் டிராட்டும் நிச்சயம் இந்த போட்டியில் இருப்பார் என உறுதியாக நம்புகிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இங்கிலாந்து அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான சரியான தேர்வாக ஜிம்பாப்வேவைச் சேர்ந்த ஆண்டி ஃபிளவர் இருப்பார் என்று நம்புகிறேன். ஏனெனில் அவர் ஃபிராசைஸ் கிரிக்கெட்டில் பயிற்சியாளராக அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் அவரது பயிற்சியின் கீழ் இங்கிலாந்து அணி புதிய உச்சத்தை எட்டும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News