ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு!

Updated: Wed, Oct 16 2024 10:21 IST
Image Source: Google

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறும் பரம்பரியமிக்க டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடரின் மீது ரசிகர்களில் எதிர்பார்ப்பு எப்போதும் அதிகளவில் இருந்து வந்துள்ளது. அந்தவகையில் இம்முறை இங்கிலாந்து அணியானது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளைடாடவுள்ளது. 

அதுமட்டுமில்லாமல் இங்கிலாந்து அணி கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாகவே ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்லமுடியாமல் தடுமாறி வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்தாண்டு நடைபெற்ற தொடரை கூட இங்கிலாந்து அணியானது 2-2 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியதே தவிர, தொடரை வெல்ல முடியவில்லை. இதனால் இம்முறை அந்த தடையை உடைத்து தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் எதிர்வரும் ஆஷஸ் தொடருக்கான இடம் மற்றும் தேதி குறித்த அறிவிப்பை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அந்தவகையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயன ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதி தொடங்கும் என்றும், இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பகலிரவு போட்டியாக பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது. 

இதுதவிர மூன்றாவது, நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிகளானது அடிலெய்ட், மெல்போர்ன் மற்றும் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் தற்போதில் இருந்தே ரசிகர்கள் மத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேற்கொண்டு கடந்த சில ஆடுகளாகவே ஆஷஸ் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் இங்கிலாந்து அணியானது இம்முறையாவது கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Also Read: Funding To Save Test Cricket

ஆஷஸ் டெஸ்ட் தொடர் அட்டவணை

  • முதல் டெஸ்ட்: பெர்த் - நவம்பர் 21-25
  • இரண்டாவது டெஸ்ட்: பிரிஸ்பேன் - டிசம்பர் 4-8
  • மூன்றாவது டெஸ்ட்: அடிலெய்டு -டிசம்பர் 17-21
  • நான்காவது டெஸ்ட்: மெல்போர்ன் - டிசம்பர் 26-30
  • ஐந்தாவது டெஸ்ட்: சிட்னி - ஜனவரி 4-8 
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை