சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களுக்கு இடையில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்குமான தரவரிசை பட்டியலையும் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரானது நடைபெற்று வரும் வேளையில் டி20 கிரிக்கெட்டிற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

Advertisement

இந்த தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வீரர்கள் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இன்றளவும் சூரியகுமார் யாதவ் முதலிடத்தில் தொடர்கிறார். அதனை தொடர்ந்து தற்போது இந்த டாப் 10-ல் மற்றொரு வீரராக இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்போது தனது வாழ்நாளில் சிறந்த தரநிலையான ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Advertisement

மேலும் இந்த டாப் 10-ல் மற்றொரு வீரராக ஒன்பதாவது இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட் இருக்கிறார். இதை தவிர்த்து டி20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியலில் முதல் நான்கு இடங்களில் எந்தவித மாற்றமும் இன்றி அதே வீரர்கள் தொடர்கின்றனர். ஆனால் ஐந்தாவது இடத்தில் இருந்த சுழற்பந்து வீச்சாளரான ரவி பிஷ்னாயை தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். 

அதே வேளையில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியின் போது பந்துவீச்சில் கலக்கிய அக்சர் பட்டேல் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ள வேளையில் தற்போது டி20 தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளது அனைவரது மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News