PAK vs NZ: நியூசிலாந்து தொடரிலிருந்து விலகினார் அசாம் கான்!

Updated: Sun, Apr 21 2024 19:01 IST
PAK vs NZ: நியூசிலாந்து தொடரிலிருந்து விலகினார் அசாம் கான்! (Image Source: Google)

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் நியூசிலாந்து அணியும் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. 

இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் இப்போட்டியிலும் வெற்றிபெறும் முயற்சியில் களமிறங்கவுள்ளது. 

இந்நிலையில் பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்திருந்த விக்கெட் கீப்பர் பேட்டார் ஆசாம் கான் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். பயிற்சியின் போது அசாம் கானிற்கு காலில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையில் அவரது காயம் குணமடைய சில நாள்கள் ஆகும் என்பதால் அவர் இத்தொடரிலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. 

பாகிஸ்தான் அணி: பாபர் ஆசம்(கே), சைம் அயூப், முகமது ரிஸ்வான்(w), உஸ்மான் கான், இர்ஃபான் கான், இஃப்திகார் அகமது, ஷதாப் கான், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, முகமது அமீர், அப்ரார் அகமது, ஃபகார் ஸமான், இமாத் வசிம், உசாமா மிர், அப்பாஸ் அஃப்ரிடி , ஸமான் கான்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை