தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க முதல் இன்னிங்ஸில் 615 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 194 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் ஆனாது. 

Advertisement

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியில் ஷான் மசூத் மற்றும் பாபர் ஆசாம் இணை அதிரடியாக விளையாடி ஆணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 200 ரன்களைத் தாண்டியது. அதன்பின் இப்போட்டியில் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாம் 10 பவுண்டரிகளுடன் 81 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

Advertisement

இதன்மூலம் பாகிஸ்தான் அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 213 ரன்களைக் குவித்துள்ளது. இதில் ஷான் மசூத் 102 ரன்களுடனும், குர்ராம் ஷஷாத் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மார்கோ ஜான்சென் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதனையடுத்து 208 ரன்கள் பின் தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர் பாபர் ஆசாம் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி செனா (தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா) நாடுகளில் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர் எனும் இன்ஸமாம் உல் ஹக்கின் சாதனையை பாபர் ஆசாம் முறியடித்துள்ளார். 

இந்த பட்டியலில் இதற்கு முன் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் 237 இன்னிங்களில் 8224 ரன்களைச் சேர்த்து முதல் இடத்தில் இருந்த நிலையில், தற்போது பாபர் ஆசாம் 197 இன்னிங்ஸ்களில் 8245 ரன்களைச் சேர்த்து முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். சமீப காலங்களில் ஃபார்மில் இல்லாமல் இருந்த பாபர் ஆசாம் தற்போது இப்போட்டியின் இரு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்து அசத்தியுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

செனா நாடுகளில் அதிக ரன்கள் அடித்த பாகிஸ்தான் வீரர்கள்

  • 8225- பாபர் ஆசம்* (197 இன்னிங்ஸ்)
  • 8224- இன்சமாம் உல் ஹக் (237 இன்னிங்ஸ்)
  • 7902- ஜாவேத் மியான்டட் (184 இன்னிங்ஸ்)
  • 7085- முகமது யூசுப் (190 இன்னிங்ஸ்)
  • 6884- யூனிஸ் கான் (219 இன்னிங்ஸ்)

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News