இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் எஞ்சிய லீக் போட்டிகள் தற்சமயம் நாளை முதல் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் எஞ்சிய போட்டிகள் ராவல்பிண்டி மற்றும் லாகூரில் மட்டும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இதனையடுத்து இத்தொடருக்கான அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இத்தொடரில் பெஷவர் ஸால்மி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் பாபர் ஆசம், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது சிறந்த டி20 லெவன் அணியை தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு இடமளிக்கவில்லை. 

Advertisement

அதிலும் குறிப்பாக விரட் கோலி டி20 கிரிக்கெட்டில் 410 போட்டிகளில் விளையாடி 13,391 ரன்களை எடுத்துள்ளதுடன், இந்த வடிவத்தில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலிலும் 5ஆம் இடத்தில் உள்ளார். அதேபோல் இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களி ஒருவரான ஜஸ்பிரித் பும்ரா 231 போட்டிகளில் விளையாடி 308 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இப்படியான சூழ்நிலையில் பாபர் ஆசாம் அவர்களை தேர்வு செய்யாதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அதேசமயம் பாபர் அசாம் தேர்ந்தெடுத்துள்ள இந்த அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஃபகர் ஜமானைத் தேர்ந்தெடுத்தார், அதன் பிறகு முகமது ரிஸ்வான் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு அணியில் இடம் கொடுத்துள்ள அவர் மிடில் ஆர்டர் வீரர்களாக இங்கிலாந்தின் முன்னாள் கேப்டான் ஜோஸ் பட்லர் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் அதிரடி வீரர் பேட்ஸ்மேன் டேவிட் மில்லரைத் தேர்ந்தெடுத்தார்.

இதனைத்தொடர்ந்து அவர் தனது அணியின் ஆல் ரவுண்டர்களாக தென் ஆப்பிரிக்காவின் மார்கோ ஜான்சன் மற்றும் ஆஃப்கானிஸ்தானின் ரஷீத் கான் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கிவுள்ளார். இதுதவிர்த்து பந்துவீச்சாளர்காளாக ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் இங்கிலாந்தின் மார்க் வுட் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கிவுள்ளார். இருப்பினும் அவர் பாகிஸ்தானை சேர்ந்த எந்த பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

Advertisement

பாபர் ஆசாம் தேர்ந்தெடுத்துள்ள டி20 லெவன்: ரோஹித் சர்மா, ஃபகர் ஜமான், முகமது ரிஸ்வான், சூர்யகுமார் யாதவ், ஜோஸ் பட்லர், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ரஷித் கான், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், மார்க் வுட்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News