பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபகர் ஜமான்- பாபர் அசாம் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஃபகர் ஸமான் 10 ரன்னில் அவுட் ஆனார்.

Advertisement

அடுத்து களமிறங்கிய சௌத் ஷகீலும் 8 ரன்களில் நடையைக் கட்ட, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாமும் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த் கேப்டன் முகமது ரிஸ்வான் - சல்மான் ஆகா இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிஸ்வான் 46 ரன்னிலும், சல்மான் ஆகா 45 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.

Advertisement

அதன்பின் களமிறங்கிய வீரர்களில் தயாப் தாஹிர் 38 ரன்களையும், ஃபஹீம் அஷ்ரஃப் 22 ரன்களையும், நசீம் ஷா 19 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓரூர்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து நியூசிலாந்து அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. 

இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தானின் பாபர் ஆசாம் 10 ரன்களைச் சேர்த்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 6ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்தார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 6ஆயிரம் ரன்களை கடந்த வீரர் எனும் தென் ஆப்பிரிக்காவின் ஹாசிம் ஹம்லா சாதனையை பாபர் ஆசாம் சமன்செய்து அசத்தியுள்ளார். முன்னதாக ஹாசிம் அம்லா தனது 123ஆவது இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்திருந்தார். 

தற்போது பாகிஸ்தானி பாபர் ஆசாமும் தனது 123ஆவது இன்னிங்ஸில் இந்த மைல் கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார். இதுதவிர்த்து பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்த சாதனையை படைக்கும் 10ஆவது வீரர் எனும் பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன் இன்ஸமாம் உல் ஹக், முகமது யூசுப், சயீத் அன்வர், ஷாஹித் அஃப்ரிடி, சோயிப் மாலிக், ஜாவேத் மியாண்டாத், யூனிஸ் கான், சலீம் மாலிக், முகமது ஹபீஸ் மற்றும் இஜாஸ் அகமது ஆகியோர் மட்டுமே பாகிஸ்தான் அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் 6000 மேற்பட்ட ரன்களை அடித்துள்ளனர்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6000 ரன்கள் எடுத்த டாப் 5 வீரர்கள்

  • ஹாஷிம் ஆம்லா (தென் ஆப்பிரிக்கா) - 123 இன்னிங்ஸ்
  • பாபர் ஆசாம் (பாகிஸ்தான்) - 123 இன்னிங்ஸ்
  • விராட் கோலி (இந்தியா) - 136 இன்னிங்ஸ்கள்
  • கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) - 139 இன்னிங்ஸ்
  • டேவிட் வார்னர்(ஆஸ்திரேலியா) - 139 இன்னிங்ஸ்
  • ஷிகர் தவான் (இந்தியா) - 140 இன்னிங்ஸ்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News